சிபிஎஸ்சி 10வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!

டில்லி,

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

ஏற்கனவே சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தபடி சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி தொடங்கி ஏப்ரல் 10ந் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பள்ளிகளைச் சார்ந்த 16 லட்சத்து 67 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.

சிபிஎஸ்இ-யின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை Cbse.nic.in அல்லது cbseresults.nic.in இன்  வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed