ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு.!

--
டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக  ஒத்திவைக்கப்பட்டு சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும்  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்பட அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதன் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம்  நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்புக்கான தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.
ல் 12ம்வகுப்பு தேர்வு அட்டவணை
இந்த நிலையில், தற்போது புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, தேர்வுகள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான  அட்டவணையை வெளியிடப்பட்டு உள்ளது.

காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு எழுத வரும் மாணவர்கள்  சானிடைசர்கள் கொண்டு வர வேண்டும்,  மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு அட்டவனைகளை வெளியிட்டு உள்ளது.