டில்லி

ள்ளிக் குழந்தைகள் உடல் பருமன் ஆகாமல் இருக்க சில வழிமுறைகளை சி பி எஸ் ஈ வகுத்துள்ளது.

சமீப காலமாக உடல் பருமன் ஆவதை குறைக்க பலரிடமும் விழிப்புணர்வு உண்டாகி உள்ளது.   அது சிறுவர் முதல் வயதானோர் வரை அதிகரித்து வருகிறது.   முக்கியமாக பள்ளிக் குழந்தைகள் பலர் ஓடியாடி விளையாட நேரம் இன்றி உள்ளனர்.  அவ்வாறு உள்ள குழந்தைகளுக்கு உடல் பருமன் ஆவது சகஜமாக உள்ளது.    எனவே உடல் பருமன் ஆவதை தடுப்பதை பள்ளிப் பருவத்தில் இருந்தே பழக்க வேண்டும் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

அவ்வகையில் சி பி எஸ் ஈ போர்டு புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளது. “சுகாதாரம் மற்றும் உடற்கல்வி” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கல்வி வரும் 2018-19 கல்வி ஆண்டில் இருந்து அமுலாக்கப்பட உள்ளது.   இதன்படி வழக்கமான உடற்பயிற்சி கல்வியில் இருந்து இது மாறு பட்டு இருக்கும் எனவும் 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து போர்டு அதிகாரி ஒருவர், “இந்த சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பள்ளி ஆசிரியர்களாலேயே நடத்தப்பட உள்ளது.  இதற்கான மதிப்பெண்களை பள்ளிகள் சி பி எஸ் ஈ இணைய தளத்தில் பதிய வேண்டும்.    இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவனும் ஒரு பிராஜக்ட் ஒர்க் முடிக்க வேண்டி இருக்கும்.   அது ஒருவர் செய்வதாகவோ அல்லது குழுவாகவோ இருக்கலாம்.

அதே போல அருகில் உள்ள தெருவை சுத்தப்படுத்துவதில் இருந்து அருகில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு சென்று விளையாட்டு போட்டி நடத்துவது வரை எதுவாகவும் இந்த பிராஜக்ட் ஒருக் இருக்கலாம்.   இதன் நோக்கமே சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.   இதற்கான பயிற்சி தற்போது ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது”  என தெரிவித்துள்ளார்.