டில்லி,

ருத்துவ நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 13ந்தேதிக்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

மருத்துவ கல்வியில் படிப்பதற்கான அகில இந்திய நுழைவு தேர்வான நீட் நுழைவு தேர்வை, மத்திய அரசு நாடு முழுவதும் இந்த ஆண்டு அமல்படுத்தியது.

இதுவரை தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடை பெற்றது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வை நடத்தியது.

இந்த நீட் தேர்வு வினாத்தாளில் உள்ள குழப்பம் குறித்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டதால், நீட் தேர்வு முடிவு குறித்து அறிவிப்பது காலதாமதமாகி வருகிறது.

ஏற்கனவே ஜூன் 8ந்தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்த நிலையில், வழக்கு காரணமாக நீட் தேர்வு ரிசல்ட் வரும் 13ந்தேதிக்கு பிறகு வெளியாகும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.