2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கிடையாது….சிபிஎஸ்இ

சென்னை:

2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ.,தெரிவித்துள்ளது.

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. வழங்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று செயன்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது,’’ சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று 2 வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்பப்படும்’’ என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. 2 வாரங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.