12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டு பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அண்மையில் சில மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்திலும் கருத்துக்கேட்புக்கு பின்னர் பள்ளிகளை இப்போது திறப்பது இல்லை என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இந் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. முழு தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு நடைமுறைகளுக்கான கொரோனா தடுப்பு விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.