தமிழக அரசு அங்கீகாரம் சி பி எஸ் இ பள்ளிகளுக்கு தேவை : உயர்நீதிமன்றம்

சென்னை

மிழக அரசின் அங்கீகாரத்தை சி பி எஸ் இ  பள்ளிகள் அவசியம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் கல்வி உரிமை சட்டப்படி அனைத்து பள்ளிகளின் கட்டணம் உள்ளிட்ட பலவற்றை மாற்றி அமைத்தது.  அத்துடன் சி பி எஸ் இ மற்றும் ஐ சி எஸ் இ பள்ளிகளும் தமிழக அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.    இந்த அரசு உத்தரவுக்கு இந்த பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி இந்த உத்தரவுக்கு தனது தீர்ப்பின் மூலம் தடை விதித்தார்.   தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது.   அந்த மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஆஷா  அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் அமர்வு, “சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு.   எனவே சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ  பள்ளிகளும் தமிழக அரசிடம் அவசியம் அங்கீகாரம் பெற வேண்டும்” என தீர்ப்பளித்தது.  ஏற்கனவே நீதிபதி மகாதேவன் அளித்த தீர்ப்பை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.