இடி மன்னர்கள், பிக்பாக்கெட்களுக்கு சிக்கல்..மாநகர பேருந்துகளில் சிசிடிவி வந்தாச்சு.. 

சென்னை

மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளன

மூலை முடுக்குகளில் ஒளிந்திருந்து நம்மைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் ‘’மூன்றாவது கண்’’ என வர்ணிக்கப்படுகிறது.

குற்றவாளிகளை அடையாளம் காணவும், வேட்டையாடவும்  இந்த ’மூன்றாவது கண்’ ,போலீசுக்கு பெரும் உதவியாக உள்ளது.

அரசாங்கத்தின் சார்பில்   அதிக அளவாய்  சாலைகளில் இதுவரை மறைந்திருந்த பார்த்த ’மூன்றாவது கண் ’இப்போது, சென்னை நகர பேருந்துகளிலும் பயணிக்க போகிறது.

முதல் கட்டமாக பூந்தமல்லியில் இருந்து பிராட்வே செல்லும் (54 எல்) நகரப் பேருந்தில் இந்த சி.சி.டிவி.கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இருக்கைக்கு நேர் எதிரே ஒன்று, கடைசி இருக்கை அருகே இன்னொன்று என பேருந்தின் உள் விவகாரங்களை ( பிக் பாக்கெட், திருட்டு, சில்மிஷம்) இந்த இரு காமிராக்களும் கண் காணிக்கும்.

பேருந்தின் வெளியே, முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது காமிரா ரொம்பவும் ஸ்பெஷல். இந்த காமிரா ‘புட் போர்டு’’ பயணிகளைக் கண்காணிக்கும். தவிர சாலை ஓர நிகழ்வுகள், சாலையில் வரும் பிற வாகனங்களின் நகர்வுகளைக் கண்காணித்து ஒரு துப்பறிவாளனாகச் செயல்படும்.

சென்னையில்  ஓடும் 3 ஆயிரத்து 300 நகரப் பேருந்துகளிலும், படிப்படியாக ‘மூன்றாவது கண்’ பொருத்தப்படும்.

இதற்கு 70 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.