பெண்கள் பாதுகாப்புக்கு ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா….அமைச்சர் தகவல்

டில்லி:

பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு ரெயில் பெட்டிகளின் உள்ளே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் என ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தினை எதிர்கொள்ள இரு விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்களில் வைபை இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அனைத்து ரெயில்வே நிலையங்கள் மற்றும் நீண்ட தொலைவு செல்லும் ரெயில் பெட்டிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது ஆகியவையாகும்.

2018ம் ஆண்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள், மனித கடத்தலுக்கு எதிராக இணைந்து போராடும் ஆண்டாக அர்ப்பணித்து செயல்படவுள்ளோம்’’ என்றார்.