கடற்கரை நேப்பியர் பாலம் முதல் ராயபுரம் மேம்பாலம் வரை சிசிடிவி காமிராக்கள் இயக்கம் தொடக்கம்!

சென்னை:

டற்கரை காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை உள்ள சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் தூரத்துக்கு  668 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்களின் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி கண்காணிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில்  அண்ணா சமாதி அருகே உள்ள நேப்பியர் பாலம் முதல் ராயபுரம் மேம்பாலம் வரை, சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு, ராஜாஜி சாலை, என்எஸ்.சி போஸ் ரோடு, இப்ராஹிம் சாலை, எஸ்பிளனேடு சாலை, வால்டாக்ஸ் சாலை, மின்ட் சாலை ஆகிய இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 668 கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை ஆணையத், அதன் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஏ.கே.விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதால் குற்றங்கள் தவிர்க்கப்படும் எனவும், குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிய முடியும் எனவும் குறிப்பிட்டார். விரைவில் குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொருத்தி சட்டம் ஒழுங்கு காக்க ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஏக்னவே முத்துசாமிப்பாலம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையான 10 கிலோ மீட்டர் தூரத்தில் 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.