தற்கொலையாக மாறிய சாலை விபத்து. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

தற்கொலையாக மாறிய சாலை விபத்து. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மேத்தா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி. நேற்று இவர் டீ குடிப்பதற்காக குன்றத்தூர் – அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனாதாகவும் பூந்தமல்லி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர். அப்போது தான் ராஜி தானாக லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட உண்மை தெரிய வந்துள்ளது.

ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ராஜி படபடப்புடன் அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருப்பதும், அப்பொழுது அந்த வழியாக 20 சக்கரம் கொண்ட லாரி ஒன்று வருவரும், அதை பார்த்ததும் ராஜி ஓடிச்சென்று லாரியின் பின்னால் உள்ள சக்கரத்துக்கு நடுவில் தானாகவே போய் படுத்து கொள்வரும் தெளிவாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து அந்த லாரியின் சக்கரம் இவர் மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உடல்நசுங்கி உயிரிழக்கிறார்.

ராஜிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இப்போது ஊரடங்கினல் ஆட்டோ ஓட்டுவதில் ஏதும் பிரச்னையா, பொருளாதார ரீதியிலான சிக்கலா அல்லது குடும்பத்தில் ஏதும் பிரச்சினையா என்பது பற்றி விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– லெட்சுமி பிரியா