சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

சென்னை:

வடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊழியரை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்தி தீவிர விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர பணியாளராக புருசோத்தமன் என்பவர் பணியாற்றி வரு கிறார். சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், தங்களது வண்டிக்கு உடனே பெட்ரோல் போட வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  மர்ம நபர்கள் முதலில் பெட்ரோல் போட சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக,  ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புருஷோத்தமனை சரமாரியாக வெட்டிவிட்டு  ஓடிவிட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது. சமுக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.

இதுகுறித்து  விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர், புருசோத்தமனை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி