காற்றின் மூலம் கொரோனா பரவும் : அதிர்ச்சி தகவல்

டில்லி

கொரோனா வைரஸ்  காற்றின் மூலமும் பரவும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதுவரை 3,57 கோடி பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதில் 10.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2.69 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 77.85 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனால் உலகெங்கும் சமூக இடைவெளி, முக்கவசம் அணிதல், கூட்டத்தைத் தவிர்த்தல் ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இது குறித்து சில தக்வலக்ள் வெளியிட்டுள்ளது.  அவை பின் வருமாறு :

கொரோனா பொதுவாக நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவும்.

 • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு அடி தூரத்துக்குள் இருப்பவர்கள் மற்றும் மிக நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிக அளவில் உள்ளது.
 • கொரோனா நோயாளிகள், இருமல், தும்மல் மற்றும் பாடுவது, பேசுவது, மற்றும் மூச்சு விடுவதன் மூலம் கண்ணுக்குத் தெரியும் அல்லது மிக சிறிய  அளவுக்குத் திரவ துளிகளை  வெளிப்படுத்துகின்றனர்,  இவற்றில் கொரோனா வைரஸ்கள் இருந்து பரவ வாய்ப்புள்ளது
 • குறிப்பாக மூச்சுக் காற்றில் வெளியாகும் திரவ துளிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம்.
 • இதில் பெரியதாக இருக்கும் திரவ துளிகள் உடனடியாக தரையில் விழுந்து விடுகின்றன.   ஆனால் சிறிய துளிகள் ஆறு டி தூரம் வரை பரவும் என்பதால் ஆறடி தூர விலகி இருக்க வேண்டும்.

காற்றின் மூலமும் சில நேரங்களில் கொரோனா பரவலாம்

 • திரவ துளிகள் மிக் மிக சிறியதாக இருக்கும்போது அதில் உள்ள பொருட்கள் காற்றில் மிதந்து செல்ல வாய்ப்புள்ளது.  இந்த பொருட்கள் பல நிமிடங்கள் அல்லது மணிகளுக்கு உயிருடன் இருக்கும்.  இவற்றால் 6 அடி தூரத்துக்கு அப்பால் உள்ளவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  கொரோனா நோயாளி அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
 • இதை காற்றின் மூலம் பரவுதல் என அழைக்கிறோம்.  இவ்வகையில் டிபி, அம்மை, புட்டம்மை போன்றவை பரவுகிறது.
 • ஒரு சில நேரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நெருங்கிய தொடர்பில் இல்லாதோர் மற்றும் ஆறு அடிக்கு அப்பால் இருந்தவ்ரக்ளையும் கொரோனா தாக்குவது நடக்கிறது.   இவை காற்றின் மூலம் பரவுதலால் நடைபெறுகிறது.
 • பொதுவாக காற்றோட்டம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ள இடங்களில் இவ்வாறு கொரோனா பரவுகிறது.

காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க சில வழிகள்

 • காற்றோட்டம் இல்லாத உட்புற நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை தவிர்க்கவும்
 • விழாக்கள், சந்திப்புக்கள், ஆகியவற்றை மொட்டை மாடி அல்லது திறந்த வெளியில் நடத்தவும்.
 • கடைகளுக்கு செல்வோர் சீக்கிரமாக பொருட்களை வாங்கவும்.
 • நமக்கு அருகில் உள்ளவர் முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டும் அவருடன் பேசவும்.