அமிதாப், லாரன்ஸ், ஹன்சிகா, சோப்ரா பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து..

கொரோனா பாதிப்பால் தெருக்களில் பிள்ளையார் சிலை வைத்து பிள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாடவும் பிரமாண சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருக் கிறது. வீடுகளில் சதுர்த்தி வாழ கொண்டாடலாம், வீட்டு பிள்ளை யாரை நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பிள்ளையார் சதுர்த்தி விழாவையொட்டி ரசிகர்களுக்கு பிரபல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ள வாழ்த்தில்,’ அனைவருக்கும் மகிழ்ச்சியான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். என்னுடைய சினிமா என்ட்ரி மகா கணபதி பாடலில் தான் ஆரம்பமானது. அதற்கான வாய்ப்பை வழங்கிய அஜீத்துக்கும் இயக்குனர் சரணுக்கும் நன்றி. விநாயக கடவுளள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது வித்தியாசமான பாணியில்,
‘V-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
V For Victory’ என சுருக்கமான வாழ்த்து பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ள மெசேஜில்,’சந்தோஷமான கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என வாழ்த்துடன் கொரோனா பாதுகாப்பையும் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள மெசேஜில்,’பப்பா மோரியா’ என மும்பை ஸ்டைலில் வாழ்த்து கூறி உள்ளார்.
’இந்த ஆண்டு நடக்கும் கணேஷ் சதுர்த்தி கொண்டட்டங்கள் வழக்கதைவிட வித்தியாசமாக இருக்கும். ஆனால் சக்தியும் நம்பிக்கையும் அப்படியே இருக்கும். இந்த கொண் டாட்டம் நம் எல்லோருக்கும் நல்லவற்றை கொண்டு வரட்டும்’ என வாழ்த்தியிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா:
நடிகை ஹன்சிகா விநாயகர் ஓவியத்தை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.