ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக களமிறங்கிய திரை பிரபலங்கள்…..!

சுசாந்த் சிங் தற்கொலைக்கு ஹிந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் வாரிசு நடிகர்கள் தான் காரணம் என புகார் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனியார் ரேடியோவுக்கு அளித்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது . தில் பேச்சாரா இயக்குனர் முகேஷ் சாப்பாரா என்னிடம் வந்த போது இரண்டு நாட்களில் நான்கு பாடல்கள் பதிவு செய்து கொடுத்தேன்.

அதற்கு அவர் உங்களிடம் போக வேண்டாம் என பாலிவுட்டில் பலர் கூறுகின்றனர். உங்களை பற்றி பல விஷயங்களை கூறுகின்றனர் என்றார். அப்போது தான் பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன் என பேட்டியில் கூறியிருந்தார் .

இந்நிலையில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாடகர்களான ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன், நடிகர்கள் மாளவிகா மோகனன், மீரா சோப்ரா, அசோக் செல்வன் உட்பட பல பிரபலங்கள் அவரை பாராட்டி ட்வீட் செய்துள்ளனர்.