நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படதற்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.