தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
ட்விட்டரில் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகிறது. இதனிடையே சில முன்னணி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.
குஷ்பு: பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஜார்ஜ் க்ளூனி. இன்றும், என்றும் உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செல்வம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி : இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #அஜித்குமார் #ActorAjithKumar sir இயற்கையும் இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
பார்த்திபன்: இல்லத்தைப் பூமியிலும் உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். மாற்று இல்லாத அல்டிமேட் ஸ்டார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் திரு. அஜித். மே மாத கடவுளே தல தானே? ரசிகர்களுக்கு!!!
வெங்கட் பிரபு: என் இனிய தல, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
இயக்குநர் சிவா: சாய் சாய். #HBDDearestThalaAJITH. அஜித் சார் நேர்மையான, எளிமையான, ஊக்கம் தரும் ஒரு மனிதர். உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சார். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பெரிய மகிழ்ச்சி, மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் எனக் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். எப்போதும் போல என்றும் எங்களுக்கு ஊக்கம் தாருங்கள்.
லாரன்ஸ்: அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்க ராகேவந்திர சுவாமியை வேண்டிக்கொள்கிறேன்.
சாந்தனு: தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதர் மீது மகத்தான மரியாதை கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியான, நேர்மறையான வருடம் அவருக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். காமன் டிபியை (common dp) அன்று வெளியிட முடியாமல் போனதற்கு மன்னித்துவிடுங்கள் தல ரசிகர்களே. எனக்கு விருப்பம் இருந்தாலும் தலயின் வேண்டுகோளை மதிக்க வேண்டும். மே தின வாழ்த்துகள்.
பிரசன்னா: பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பான தல. என்னைப் போன்ற லட்சியவாதிக்கு, திரைப்பட பின்னணி இல்லாத ஒருவரால் போராடி, இந்தத் துறையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு நீங்கள்தான் மிகப்பெரிய உந்துதல். லவ் யூ தல.
இமான்: மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். எளிமையின் மறு உருவம். உங்கள் நல் ஆரோக்கியத்துக்கு எனது பிரார்த்தனைகள் சார். உங்களது மனிதநேய நடவடிக்கைகள் நமது அன்னை பூமியில் இன்றும் என்றும் தொடர்ந்து மேலோங்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள்.
யுவன்: பிறந்தநாள் வாழ்த்துகள் சீஃப். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். கடின உழைப்பு என்றும் தோற்காது. தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
அனிருத்: பிறந்தநாள் வாழ்த்துகள் தல அஜித் சார்.
பாண்டிராஜ்: பிறந்தநாள் வாழ்த்துகள் சார். நீண்ட, ஆரோக்கியமான ஆயுளைத் தந்து கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
அருண் விஜய்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
ஹன்சிகா: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.
மஞ்சிமா மோகன்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.
சிபிராஜ்: அஜித் சாருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளும், அற்புதமான வருடமும் அமைய வாழ்த்துகிறேன்.
ஹரிஷ் கல்யாண்: தல அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். திரையில் அவரது ஆளுமையின் மூலமாகவே ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு மாஸ் நாயகன். எங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு உந்துதலாக இருப்பவர். உங்களுக்கு எப்போதும் சிறப்பானவையே அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சார்.
இயக்குநர் சேரன்: இன்று அஜித் அவர்களுக்கு பிறந்த நாள். முயற்சி, உழைப்பு இரண்டுமே அவரை இன்று உயரத்தில் வைத்திருக்கிறது.. அவருக்கு நான் சொல்லும் இந்த பிறந்தநாள் வாழ்த்து போய் சேரவாய்ப்பில்லை.. எனவே அவரை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு சொல்லி விடுவோம்