பிரபல குத்துசண்டை வீரர் முகமது அலி இறுதி நிகழ்ச்சி: ஒபாமா உட்பட பலர் நெகிழ்ச்சியான அஞ்சலி
பிரபல குத்துசண்டை வீரர் முகமது அலியின் இறுதி நிகழச்சி அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில்இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், முகமது அலியின் விளையாட்டு மற்றும் சமூக சாதனைகள் குறித்து உரையாற்றினார்கள்.

மனித உரிமைகள் மற்றும் அமைதிக்காக முகமது அலி செய்த பணிகள் குறித்தும், இறுது வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்த அவரது உறுதி குறித்தும் பலரும் புகழ்ந்து பேசினார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமா. “முகமது அலி மிகப் பெரியவர்: பிரகாசமான மனிதர்: உண்மையானவர்” என்று புகழ்ந்தார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், “மோசமான நோயை முகமது அலி எதிர்கொண்டு போராடிய காலத்தில் அவர் காட்டிய நகைச்சுவை உணர்வும், கண்ணியமும் வியக்கவைத்தது” என்றார்.
முகமது அலியின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் சுமார் 14 ஆயிரம் பேர் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.