பிரபல சினிமா தயாரிப்பாளர் ‘சித்ரா’ ராமு காலமானார்!

சென்னை:

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு  காலமானார். அவருங்ககு வயது 73.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.  சிகிசிசை பலனின்றி காலமானார்.  அவரது உடல் அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

chithra-ram

1987-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்தியராஜ் நடிப்பில் வெளியான படம் ஜல்லிக்கட்டு, பாரதிராஜா இயக்கத்தில் உருவான மண்வாசனை, கமலஹாசன் நடித்த சூரசம்ஹாரம், வாழ்க்கை உள்பட 14 படங்களை தயாரித்துள்ளார்.

சித்ரா ராமுக்கு, தங்கம் என்கிற மனைவியும், விஜய சரவணன், விஜய கார்த்தி என்கிற இரு மகன்களும், குகப்ரியா என்கிற மகளும் உள்ளனர்.

இறுதி சடங்குகள்  அசோக்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

கார்ட்டூன் கேலரி