பிரபல ஒளிப்பதிவாளர் என். கே. விஸ்வநாதன் மறைவு

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

தமிழ் திரையுலகில் 1970-களில் ஒளிப்பதிவாளராக நுழைந்தவர் என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

1990ல் இணைந்த கைகள் படம் மூலம் இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

ககடந் சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் தனது சென்னை வீட்டிலேயே இருந்தார் விஸ்வநாதன். இந்த நிலைியல் மாரடைப்பால் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.