கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் – திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல் முருகன் ட்விட்டர் பதிவில், ”ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கறுப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள். ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ரீவைண்ட் பட்டன் அழுத்தினால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.