வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை: தேர்தல் ஆணையர்

சென்னை:

வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 18ந்தேதி வாக்குப்பபதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. கடைசி கட் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் , நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

வருகிற 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து 16,17,18 ஆகிய 3 தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது  அதேபோல் வாக்கு எண்ணிக்கை தேதியான மே 23-ஆம் தேதியும் டாஸ்மாக்கை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம் என்றவர்,  மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 2 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு  நடைபெறும் என்றவர், அங்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்தார்.

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்தவர் பணியில் இருக்கும் அதிகாரிகள், காவல்துறையினர் செல்பேசி பயன்படுத்தலாம், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலின்போது அதிக அளவிலான பணம் பிடிபட்டுள்ளதாக கூறியவர்,க டந்த 2016 2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது. அப்போது ரூ.113 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, 139.91 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அறை உள்பட 3 அறையில் நடந்த சோதனை   பற்றி வருமான வரி துறை இதுவரை விவரம் தரவில்லை.

இவ்வாறு  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: cell phone banned, election commissioner, Polling booth, sathayaprada sahu
-=-