சிமெண்ட், ஏசி.,   கேமரா உள்ளிட்டவைகள் விலை குறையுமா?: இன்று தெரியும்!

சிமெண்ட், ஏசி.,   கேமரா உள்ளிட்ட பொருட்களின் விலை குறையுமா என்பது என்று கூட இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் தெரியவரும்ய.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் முதல் அமலானது.  ஜிஎஸ்டி வரி, பொருத்தவரை 5, 12, 18, 28 என நான்கு வித சதவிகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில்  பிரதமர் மோடி, நாட்டு மக்களின் நலன் கருதி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் டில்லியில் இன்று நடைபெறுகிறது.   இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான வரிப் பிரிவிற்கு மாற்றும் அறிவிப்பு வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

சிமெண்ட், ஏசி., டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு 24% ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்படும் அவற்றுக்கு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கப்படுமானால் அவற்றின் விலை கணிசமாக குறையும்.

அதே நேரம், “99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் குறைவான வரிவிதிப்பிற்கும் கொண்டு வரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரத்தில் தலையிடுவது போல்  இருக்கிறது” என்று மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து இன்றைய ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.