ஏ சான்றிதழ் பெற்ற தனுஷின் திரைப்படம்

சென்னை

டிகர் தனுஷின் வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வடசென்னை. இப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட உள்ளது. இதில் தனுஷுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்டிரியா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாரயணன்.

கதாநாயகனின் 30 வருட வாழ்க்கையை சொல்லும் படமான வட சென்னை 3 பாகங்களாக தயாராக உள்ளது. முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி உலகெங்கும் வெளியகிறது. தணிக்கை வாரிய அங்கத்தினர்கள் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்கினால் யு ஏ சான்றிதழ் அளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

ஆனால் படத்தயாரிப்பாளரான தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் தணிக்கை வாரியத்தால் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திரையரங்குகளில் பார்க்க இயலாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்றாம்ல் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.