சென்சாரில் வெட்டப்பட்டதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட த்ருவ் விக்ரம்…!

பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி திருப்தி அளிக்காததால் படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றிய கிரிசய்யா ஆதித்ய வர்மா என்ற டைட்டிலுடன் இயக்கினார்.

துருவ் விக்ரம்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்ப்பை பெறவில்லை படம் .

எனினும், த்ருவ் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை சென்சார் கட் செய்த நிலையில், அந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ருவ் வெளியிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி