புதுவை : பொறியியல் மாணவர் தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரி

புதுச்சேரி மாநில அரசு பொறியியல் மாணவர்களின் செண்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

செண்டிரலைஸ்ட் அட்மிஷன் கமிட்டி (செண்டாக்) என்பது ஒருங்கிணைந்த விண்ணப்ப முறை ஆகும்.  புதுச்சேரி மாநிலத்தில் இம்முறை மருத்துவம், பொறியியல், சட்டம், செவிலியர்,  பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு பின்பற்றப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்த முறையில் உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.   ஆனால் தொழில் நுட்ப காரணங்களால் இந்த பட்டியலை அரசு அன்று வெளியிடவில்லை,

அதன் பிறகு ஒரு நாள் தாமதமாக புதுவை அரசு மருத்துவம், பல் மருத்துவம், இளம்கலை, சட்டம் ஆகிய மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஜூன் 30 ஆம் தேதி வெளியிட்டது.  தற்போது பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை புதுவை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் http://atomickademo.com/centac/Merit_list.html என்னும் இணைய தளத்தில் காண முடியும்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Centac list for engineering students of Pondicherry is released
-=-