புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரி:

புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டது.

புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்டாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சிபிஐ ரெய்டு நடை பெற்றது. அதைத்தொடர்ந்து, சென்டாக் குழு மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BDS Merit list in Puducherry, Centac Release of the MBBS, புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
-=-