புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்! சென்டாக் வெளியீடு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும்  அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று  சென்டாக் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனனேவே பெறப்பட்ட நிலையில், இன்று  அரசு இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தர வரிசை பட்டியலை www.centacpuducherry.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஆட்சேபனை இருந்தால்  நாளைக்குள் (16 ம் தேதி) தெரிவிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.