டில்லி

விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டில்லியில் பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தில் பங்கு பெற்று வரும் விவசாயிகளிடம் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மிகவும் கடுமையாக நடந்துக் கொள்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வருவது தெரிந்ததே.

ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மாவும் மத்திய வேணாண் அமைச்சருக்குத் தனது முகநூல் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அந்த பதிவில் ரகுநந்தன் சர்மா, ”அன்புள்ள நரேந்தர் ஜி, நீங்கள் இந்த அரசில் ஒரு பாகமாக உள்ளீர்கள்.  உங்கள் கடமை விவசாயிகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.  ஆனால் ஒரு சிலர் உதவியைத் தேவை என்னும் போது  நீங்கள் ஏன் அதைச் செய்ய வேண்டும்?  நிர்வாணமாகப் போக விரும்புபவனுக்கு நீங்கள் பலவந்தமாக ஆடை அளிப்பதால் என்ன ப் அயன்?

நீங்கள் உங்கள் கடின உழைப்பின் மூலம் இவ்வாறு பயனைப் பெற விரும்புவது வெறும் கற்பனை ஆகும்.  இப்போது பதவியின் அகம்பாவம் உங்கள் தலைக்குள் புகுந்துள்ளது.  தற்போது எது அவசியம் என்பதை நீங்கள் ஏன் உணர மறுக்கின்றீர்கள்.  நாம் இவ்வாறு காங்கிரஸின் பிடிவாதக் கொள்கைகளை கடைப்பிடிப்பது நமக்குப் பிடிக்காத ஒன்று.  சொட்டு சொட்டாக ஒழுகும் நீரால் பானை முழுமையாக காலி ஆகும்.  எனவே நாம் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.

தேசியத்தை பலமாக்கும் அனைத்தையும் நாம் பயனப்ட்த்தவில்லை என்றால் நாம் விலக்கப்படுவோம்.   நீங்கள் இதை அறிந்து அதன்படி செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.  ஆர் எஸ் எஸ் அமைப்பின் சித்தாந்தம் என்பது தேச ஒற்றுமை, தியாகம் மற்றும் சமர்ப்பணம் என்பதாகும்.  இதை நூறாண்டுக்கும் மேலாகப் பின்பற்றியே நாம் தாய் நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு தேசிய அரசை அமைத்துள்ளோம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பதை மறக்கக் கூடாது” எனப் பதிந்துள்ளார்.