டில்லி:,

மிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிநிலையில், தமிழகத்துக்கு ரூ.487 கோடி பயிர்க்காப்பிட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய விவசாயத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்த அரசாணையில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பயிர் காப்பீட்டுக்கு ரூ.487 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வறட்சி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதிஒதுக்கி விவசாயத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

 

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி சென்று பிரதமரிடம் விவசாய பிரச்சினை குறித்து வற்புறுத்திய நிலையில், இன்று மத்திய விவசாயத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.