சென்னை:
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது  குறித்து மத்தி யமாநில அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 3ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், ஊரடங்கு மேலும் ஓரிரு வாரம் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிட்டுள்ளார். அதில்,  ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது படிப்படியாக தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
எந்த முடிவாக இருந்தாலும்,  அதற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் கடமை
கடைசி நேரத்தில் அறிவித்து,  பதற்றத்தை அதிகரித்திடாமல், முன்வட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் தவிர்க்க முடியும்
பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய – மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.
35 நாட்களுக்கும் மேலாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க  வேண்டும்.