விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை:

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

விளை நிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

நேற்று சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை கைது செய்த போலீசார்  சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

அவர்களை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து குறைகள்கேட்டறிந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று விவசாயிகளை  சந்தித்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: central and state governments, farmers protest, Heavy Power Tower, Kamal Hassan, listen to farmers' demands, Minister Thangamani, அமைச்சர் தங்கமணி, உயர் மின் கோபுரம், கமல்ஹாசன், விவசாயிகள் போராட்டம்
-=-