Random image

பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி….மன்மோகன் சிங்

டில்லி:

பொருளாதார விவகாரங்களில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று மன்கேமாகன் சிங் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசுகையில்,‘‘ ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களில் இருந்து இன்னும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மைகளை பெறவில்லை

விவசாயிகளின் பிரச்னை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சி குறித்து கபில் சிபிலின் புத்தகம் விளக்குகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது’’ என்றார்.