ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

டெல்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக. ப.சிதம்பரம் தொடர்பாக நடைபெற்றுள்ள விசாரணை அறிக்கையை, டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் இன்று தாக்கல் செய்தது.

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, நிதி அமைச்சராக இருந்தபோது,  மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம்  லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐயும்,  சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் குற்றம் சாட்டி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் கோர்ட்டில் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், மலேசிய அரசிடம் இருந்து தகவல் கோரப்பட்டு உள்ளதாகவும், இதுவரை பதில் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aircel Maxis caseள, CB, chidambaram, ED, Karthi Chidambaram, அமலாக்கத்துறை, ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு!! அமலாக்க துறை மேல்முறையீடு, சிபிஐ, ப.சிதம்பரம்
-=-