சிபிஐ துணை எஸ்பி தேவேந்திரகுமாருக்கு 7 நாள் சிபிஐ காவல்: டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி:

சிபிஐ இயக்குனர்களியே  ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட துணை எஸ்.பி.தேவேந்திரகுமாரை 7 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்ப டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பான,  மத்தியப் புலனாய்வுத் துறையில் உள்ள இயக்குனருர், அலோக் வெர்மா, சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இருவரும் மத்திய புலனாய்வு ஆணையத்தில் ஒருவர் மீது ஒருவர் சேரை வாற்றி இறைத்து வந்தனர்.

கருப்பு பண விவகாரத்தில், ராகேஷ் அஸ்தானா இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மாவும், அலோக் வர்மா மீது சந்தேகம் இருப்பதாக அஸ்தானாவும் புகார் கூறினர்.

இதையடுத்து அடுத்து சிபிஐ, அஸ்தானாமீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அஸ்தானா புகார் மீதான குற்றச்சாட்டு குறித்து, அவருக்கு நெருக்கமான துணை கண்காணிப்பாளர் அந்தஸ்த்தில் உள்ள  சிபிஐ அதிகாரி தேவேந்திர குமாரை சிபிஐ கைது செய்தது.

அவர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கோப்பில் அஸ்தானாவுக்கு ஆதரவாக கையெழுத் திட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் அவர் தவறான வகையில் கையெழுத்திட்டருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிபிஐ அலுவலகத்தினுள்ளேயே சில அறைகளிலும், அஸ்தானாவுக்கு ஆதரவான அதிகாரிகள் அறைகளிலும் ரெய்டு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தேவேந்திர குமார்  டில்லி உயர்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது, தன்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிப்படுவதாக தேவேந்திர குமார் கூறினார். ஆனால், நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

தேவேந்திர குமாரை 7 நாளில் சிபிஐ காவலில்  விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது.  அதைத்தொடர்ந்து சிபிஐ காவலுக்கு அனுமதி அளித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணையை வரும் 29ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.