டில்லி:

இ-சிகரெட் எனப்படும்  எலெக்ட்ரானிக் சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

இ- சிகரெட்டை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்று கூறி அதற்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் இ சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது

எலக்ட்ரானிக் நிகோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் (இ.என்.டி.எஸ்.) எனப்படும் இ-சிகரெட்டின் உற்பத்தி, விற்பனை ( ஆன்லைன் விற்பனை உள்பட) ஆகியவற்றுக்கு தடை விதிக்க மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை,   இ-சிகரெட்டுகள், நிகோட்டின் சுவையுடன் கூடிய குக்கா உள்ளிட்ட மாற்று புகை பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அனைத்து வழிகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. அதையடுத்து, இ-சிகரெட் உள்பட  பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர  இருப்பதாக சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், அதற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.