பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

டில்லி:

நாடாளுமன்ற கூட்டத்திதொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சர்வை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்  6 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(பைல் படம்)

நாடாளுமன்ற மக்களவையில் மீண்டும் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்  பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் சைபர் குற்றங்களை விசாரிக்க அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்த மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டத்தில் திருத்தம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ,நுகர்வோர் பாதுகாப்பு மசோதா,மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் போன்றவை முக்கியமான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும்  நிலையில் இன்று  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்பட முக்கிய அமைச்ர்கள்   பங்கேற்க உள்ளனர். இதில், 6 முக்கிய மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட சில மசோதாக்கள் மக்களவையில் கடந்த நாடாளுமன்ற காலத்தில் நிறைவேறியுள்ள போதும் மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்காமல் திருத்தம் செய்ய நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் சில மசோதாக்களை மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.