மத்தியஅரசு ஒப்பந்தம்: மீண்டும் நெடுவாசலில் போராட்டம்!

புதுக்கோட்டை:

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்றும் நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

(கோப்பு படம்)

எங்களது பூமியை விட்டுக்கொடுக்க மாட்டோம்… என்று அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற தொடர்போராட்டம்  காரணமாக மத்திய அமைச்சர் பொன் கிருண்ணன் அப்பகுதி மக்களிடம் பேசி, ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட மாட்டாது என  உறுதி அளித்ததின்பேரிலேயே போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், இன்று நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இது மக்களை ஏமாற்றும் செயல் என்று  நெடுவாசல் பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்றும் நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பை விட 100 மடங்க வேகத்துடன் போராடுவோம் என்றும்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

நெடுவாசலில் விவசாயிகள் குவிய தொடங்கி உள்ளனர்… இன்று பிற்பகலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நிலையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது நெடுவாசலில்…

மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களிடையே பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.