டெல்லி: நிதி ஆணைய பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.335.41 கோடியை விடுவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மாநிலங்களின் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி  வருவாயை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.

அதன்படி 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைபடி, 6வது மாத தவணையாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியில் ரூ.335.41 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.952.58 கோடி, பஞ்சாபிற்கு ரூ.638 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.