கேரளா இயற்கை சீற்றம்…அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் அதி தீவிர பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சுமார் 400 பேர் வரர உயிரிழந்தள்ளனர். நாடு முழுவதும் மட்டுமின்றி உலகளவில் இருந்து நிவாரண பொருட்கள கேரளாவில் குவிந்த வண்ணம் உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். மத்திய அரசு சார்பில் முதல் ரூ.100 கோடியும், பின்னர் ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. இதையடுத்து கேரளா இயற்கை சீற்றத்தை அதி தீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.