மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது!! ப.சிதம்பரம்

டில்லி:

‘‘உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது’’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மந்தமாக செயல்படுகிறது. மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு இந்தியாவில் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு கிடைக்கவில்லை. இதுதான் முரண்பாடு.

2013ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் மிக முக்கியமான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 2014ம் ஆண்டு ஆட்சி மாறியது. அப்போது அந்த சட்டத்தை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தவில்லை. பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு சட்டத்துக்காக ஒதுக்கப்படும் தொகையையும் குறைத்துக் கொண்டே வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.