குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை! மத்தியஅரசு எதிர்ப்பு!!

--

டில்லி,

குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு  மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

‘குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கவேண்டும்’ என்ற பொதுநல வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கான தகுதி நீக்க அதிகாரங்கள் ஏற்கெனவே உள்ளன என்றும், இதற்குப் புதிய தடைச் சட்டம் தேவையில்லை என்றும் மத்திய அரசின் சட்டத்துறை கூறியுள்ளது.

இதன் காரணமாக  குற்றவாளிகள் அரசியலில் போட்டியிட மத்திய பாரதியஜனதா அரசு விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அரசியலில் இருப்போர் குற்றச்செயலில் ஈடுபட்டால், ஆறு ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது