லோக்பால் தலைவரை தேர்வு செய்ய குழு அமைப்பு….மத்திய அரசு

டில்லி:

லோக்பால் தலைவரை தேர்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் மசோதா 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்த சட்டத்தின் படி லோக்பால் அமைப்பை உருவாக்க மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. லோக்பால் தலைவர், உறுப்பினர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை இதற்காக மத்திய அரசு இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.