காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கும்: தமிழிசை

சென்னை:

காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதியஜனதாவும் கலந்துகொண்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக  பாஜக தலைவர் தமிழிசை,  உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி,  காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என உறுதியளித்தார்.

மேலும், காவிரி வழக்கில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட பாரதீய ஜனதா துணை நிற்கும்.  காவிரியில் குறைக்கப்பட்ட நீரை திரும்பப் பெற சட்டப்படி நடவடிக்கை தேவை என்ற அவர், அடுத்து கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி