ஐதராபாத்:

தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக ஐதராபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா மற்றும் வாரங்கால் மாவட்டங்களில் 200 ஏக்கர் நிலம் மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை தவிர்த்து மஹபூப்நகர் மற்றும் சித்திபேட் ஆகிய பகுதிகளில் 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஸ்வஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தெலங்கானா சுகாதார துறை மந்திரி சி. லட்சுமா ரெட்டி கூறுகையில், ‘‘ எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 2 மருத்துவ கல்லூரிகள் அமைவது மக்களுக்கு தரமுள்ள மருத்துவ சேவைகளை வழங்க உதவும்’’என்றார்.