‘இ சிகரெட்’ இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை: மத்திய அரசு அதிரடி

டில்லி:

ந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. அத்துடன் இ சிகரெட் இறக்குமதி செய்யவும் தடை விதிப்பதாக அறிவித்து உள்ளது.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு  9 லட்சம் பேர் பலியாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து வருகின்றன. உயிர்களை காவு வாங்கும் சிகரெட் புகைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிகரெட் புகைப்பது தொடர்ந்துதான் வருகிறது.

புகைப்பழகத்திற்கு அடிமையான  பலர், உடல் நலத்தை கருத்தில்கொண்டு,  நிகோடின் கலந்த சாதரண சிகரெட்டுக்கு பதில்,  இ சிகரெட் எனப்படும் மின்னனு கருவி மூலம் புகைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இ சிகரெட் புகைப்பதால், புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்,  அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா பாராளுமன்றத்தில் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டில்லியில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இ சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்படடது.

இதையடுத்து,  இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கும், இறக்குமதி செய்யவும்  தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

‘இ சிகரெட்’ தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.