பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு

--

டில்லி:

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்ந்து வரும் 11ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வரும் 10ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும்  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மற்றும்  தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களின்  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 11ந்தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 8ந்தேதி வரை தொடர்கிறது.

முன்னதாக டிசம்பர் 10ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.