மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை….அதிர்ச்சி தகவல்

மதுரை:

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழக அமைச்சர்கள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ‘‘மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி