இன்று பாராளுமன்றத்தில்  நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை அடுத்த 3 ஆண்டுகளில் 3% குறை வாக இருக்க இலக்கு
  • பாதுகாப்பு துறைக்கு மூலதன செலவு ரூ.86,414 கோடி, மூலதன செலவு கடந்த ஆண்டை விட 2.5% அதிகம்.
  • 2016-17 வருவாய் பற்றாக்குறை 2.1%, கடந்த 2015-16-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை 3.2%.
  • முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கான லாபத்திற்கு வரி கிடையாது 
  • ரூ.3 லட்சத்திற்கும் மேல் உள்ள ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை
  • 2015-2016 ஆண்டில் 2 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்
  • 24 லட்சம் மக்கள் மட்டும் 10 லட்சத்துக்கு மேல் வருமானம் காட்டி உள்ளனர்
  • பெரிய அளவில் வருமான வரி செலுத்தாத நாடாக இந்தியா உள்ளது
  • 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
  • வரி வருவாயை செலுத்துவதற்கான தளத்தை அதிகரிக்க திட்டம்
  • வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு மொத்த வரி வருவாய் 11.30 லட்சம் கோடி.
  • வருமான வரி செலுத்தும் 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர் மாத சம்பளதாரர்கள்
  • வீடு கட்டுபவர்களுக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படும்: அதிக அளவில் வரிச்சலுகை பெற நடவடிக்கை
  • முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிப்பு
  • வெளிப்படையான வங்கி டெபாசிட் விவரங்கள் மூலம் எதிர்காலத்தில் வரிவசூலை அதிகரிக்க திட்டம்
  • சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம் வகுக்கப்படும்
  •  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அளித்த வரிச்சலுகை தொடரும்
  • அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை
  • இயற்கை எரிவாயு-இறக்குமதி வரி 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைப்பு
  • ஸ்வைப் மிஷின்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.