Random image

40 சீக்கியர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு சம்மதம்

டில்லி:

பஞ்சாப் மாநிலம் பொற்கோவிலில் 1984ம் ஆண்டில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய 40 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

40 பேருக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு அமிர்தசரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு தன் பங்கு இழப்பீட்டை வழங்கிவிட்டது. மத்திய அரசு தன் பங்கு இழப்பீட்டை வழங்கக் கோரி பஞ்சாப் அரசும், சிரோன்மணி அகாலிதளமும் வலியுறுத்தி வந்தன.

மாநில அரசே முழு இழப்பீட்டையும் வழங்கும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். இதைதொடர்ந்து மத்திய அரசு அதன் பங்கு தொகையான ரூ. 2.16 கோடியை வழங்க, ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யபால் ஜெயின் நீதிமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.